தமிழகத்தில் ஒரு பாடமாக அறிமுகமாகிறது திருக்குறள் – சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஒரு பாடமாக அறிமுகமாகிறது திருக்குறள் - சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரு பாடமாக அறிமுகமாகிறது திருக்குறள் - சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரு பாடமாக அறிமுகமாகிறது திருக்குறள் – சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு!

தமிழகத்தின் மிக தொன்மை வாய்ந்த, பழம்பெரும் நூல்களில் ஒன்றான திருக்குறளை போற்றி பாராட்டும் வகையில், அதை ஒரு பாடமாக சென்னை பல்கலைகழகம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

திருக்குறள் பாடம்:

தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான மிக பழமையான நூல் திருக்குறள். இரட்டை வரிகளுக்குள் மனித வாழ்க்கையை அடக்கியுள்ள சிறப்பு திருக்குறளுக்கே உரித்தானது. இந்த திருக்குறளுக்கு என்றே தமிழகத்தில் ஒரு தனி சிறப்பு உண்டு. திருவள்ளுவர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட திருக்குறள் 133 அதிகாரங்களை கொண்டது. இது ஒவ்வொரு அதிகாரங்களுக்கு கீழ் பத்துப்பத்து குறள்கள் வீதம் 1330 குறள்களை உள்ளடக்கியது.

கோவை மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழ் மொழியின் தொன்மையை இரண்டு வரிகளில் உலகுக்கு எடுத்துரைத்த பெருமை திருவள்ளுவரை சாரும். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க நூலை போற்றாதவர் என்று எவரும் இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பேருந்துகள் துவங்கி அலுவலகங்கள், பள்ளி பாடங்கள் வரை அனைத்திலும் இடம்பெற்றுள்ள திருக்குறள் மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்த திருக்குறளை போற்றி பாதுகாப்பத்தில் தமிழக அரசின் சீரிய முயற்சி வியக்கத்தக்கது.

அந்த வகையில் நெடுநாளாக பின்தங்கி இருந்ததானா திருவள்ளுவர் புகைப்படம் மற்றும் திருக்குறளை மீண்டுமாக அனைத்து அரசு பேருந்துகளிலும் காட்சிப்படுத்த தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர சில தினங்களுக்கு முன்னாக பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

எனினும் இதனுடன் மற்றொரு முயற்சியாக திருக்குறளை ஒரு பாடமாக சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தவிர சென்னை பல்கலைகழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் இளநிலை மாணவர்களுக்கு திருக்குறள் ஒரு பாடமாக அறிமுகமாக உள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!