75வது சுதந்திர தின விழா – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்காக நாளை சென்னையில் காலை 6 மணி முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா:
நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு 75வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி (நாளை) சென்னை கோட்டையில் நடைபெற உள்ளது. அதற்காக சென்னையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ரூ. 35 லட்சம் வரை இழப்பு!
அதன்படி உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் பிற வாகனங்கள் அனைத்தும் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்கி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவின் போது வழக்கமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.