சென்னை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி தலைக்கவசம் கட்டாயம்!

0
சென்னை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு - இனி தலைக்கவசம் கட்டாயம்!
சென்னை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி தலைக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகளவு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை பெருநகரில் கடந்த ஆண்டு மட்டுமே 600க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். எனவே விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று முதல் ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

தலைக்கவசம் கட்டாயம்

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் குறிப்பாக சென்னை போன்ற மாநகரில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மற்ற நகரங்களை விட அதிகமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு சென்னையில் ஏற்படும் இரு சக்கர வாகன விபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 3,294 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள் தான் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் DA உயர்வு – ரூ.2 லட்சம் வரையில் சம்பள உயர்வு!

இதில் பின்னிருக்கை பயணிகளும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர். அதனால் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடையே சாலை போக்குவரத்து விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று முதல் சென்னையில் ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கூறியதாவது சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இரு நபர்களும் கட்டாயமான முறையில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை மீறி செயல்படுவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்படுவதுடன், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here