சென்னை: இன்றைய (செப்.29) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னையில் இன்றைய தினம் (செப்-29) நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாறுபடாமல் இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை குறையும் என எதிர்பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை:
தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அந்த நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ 101.39 க்கும், மும்பையில் லிட்டர் ரூ 107.47 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
SSC 3261 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
அதேபோல் டில்லியில் டீசல் 1 லிட்டர் ரூ.89.57 க்கும், மும்பையில் 1 லிட்டர் ரூ.97.21 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு தங்களது பட்ஜெட் அறிவிப்பில் தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்து அமல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலையானது 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததது. நேற்று சென்னையில் கடந்த சில நாட்களை விட பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.99.15 க்கும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.94.17 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!
இதனை தொடர்ந்து சென்னையில் இன்று (செப்-29) நேற்றைய நிலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.15க்கும், டீசல் லிட்டர் ரூ.94.17க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு எரிபொருளின் தேவை அதிகரிப்பதாலும், கச்சா எண்ணெய் சில நாடுகள் சேமித்து வைத்து வருவதினாலும் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.