சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை – தெற்கு ரயில்வே தகவல்!
சென்னை திருநெல்வேலி இடையே சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 28ம் தேதி வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில் சேவை:
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே தனது பயண சேவையை வழங்கி வருகிறது. குறைவான நேரத்தில் அதிக வசதிகளுடன் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக சென்னை – திருநெல்வேலி இடையே நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான இலவச கேஸ் சிலிண்டர் – உடனே விண்ணப்பிக்கவும்!!!
சபரிமலை சீசனை முன்னிட்டு வழங்கப்படும் இந்த ரயில் சேவையானது எழும்பூரில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:15க்கு திருநெல்வேலிக்கு சென்றடையும் என்றும், நெல்லையிலிருந்து மீண்டும் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11:15க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை சபரிமலை பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.