சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

0
சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் - அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் - அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். இதனால் மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகைபிரியர்கள் இன்று அதிக அளவில் தங்கநகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு:

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்கள் தங்கநகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

ExamsDaily Mobile App Download

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்ததற்கான காரணமே இது தான். சிக்கலின் போது நமக்கு தேவைப்படும் பணம், தங்கம் தான் என்பதை உலக அளவிலான முதலீட்டாளர்கள் மீண்டும் ஒருமுறை உணரத் தொடங்கியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக போர் இல்லாத அமைதியான சூழல் காணப்பட்டதால், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குவிந்திருந்ததால், தங்கத்தின் உண்மையை தெரிந்து கொள்ள தவறிவிட்டனர். ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தங்கத்தை நோக்கி அனைவரையும் நகர வைத்துள்ளது.

Post Office இல் மாதம் ரூ.550 ரிட்டன்ஸ் பெறும் சூப்பர் சேமிப்பு திட்டம் – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையாகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here