சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு – இன்றைய மாலை நிலவரம்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
தங்கத்தின் விலை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் கொள்கின்றனர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இவ்வாறு ஏறி கொண்டே போகும் தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இன்று தங்கத்தின் அதிரடி சரிவை கண்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரி மத்திய அரசால் அதிகரிக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே இருந்தது. இதனால் நகைப்பிரியர்களுக்கிடையே எப்போது தங்கம் வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
இனியாவை கோவத்தில் அறைந்த ராதிகா, அதிர்ச்சியடையும் பாக்கியா – அடுத்து நடக்க போவது என்ன?
அதன்படி, நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,893க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,144 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,295 ஒரு சவரன் ரூ.42,360 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று நகைப்பிரியர்களை மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக தங்கம் விலை இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது. அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,885க்கு விற்பனையாகிறது. இதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.20க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,200க்கு விற்பனையாகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை பணவீக்கம், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.