சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி குறைவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி குறைவு – இன்றைய நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூலை 12) காலை துவங்கி இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை குறைப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்றைய விற்பனை:

இந்த மாத துவக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கம் கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய விற்பனையில் அதிரடியாக குறைந்திருக்கிறது. குறிப்பாக, கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு ஆபரணத் தங்கங்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்ததால் ஒரு சவரன் நகை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சுப காரியங்களுக்கு தங்க நகைகளை வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் இறக்குமதிக்கான வரி விகிதம் உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், கடந்த ஒரு சில நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (ஜூலை 12) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரை குறைந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

TNUSRB தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இதன் மூலம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,360 என விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 வரை குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,670க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்றைய விற்பனையில் 50 காசுகள் குறைந்து இன்று ரூ.62.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் இன்று ஆபரணத் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!