IPL லீக் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL லீக் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!
IPL லீக் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!
IPL லீக் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் வரும் ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து நடைபெற இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் 11 உத்தேச வீரர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

IPL 2022 மெகா ஏலம் முடிவடைந்து சில நாட்களே கடந்திருக்கும் நிலையில் எல்லா இடங்களிலும் ஒரே ஒருவிதமான உற்சாகம் காணப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு அணிகளும் முதல் போட்டியில் எந்த வீரர்களை களமிறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முதல் போட்டியில் விளையாடும் உத்தேச 11 அணி வீரர்களின் விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.

பிப்.21 (நாளை) முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – மாநில அரசு அறிவிப்பு!

வழக்கமாக IPL போட்டிகளில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் CSK அணி இந்த முறையும் பலம் வாய்ந்த வீரர்களுடன் களம் காண இருக்கிறது. எனவே, IPL 2022 ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் உத்தேச வீரர்கள் வலுவானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது CSK அணியில் உள்ள சிறப்பான 5 பேட்ஸ்மேன்கள், குறைந்தபட்சம் 2 ஆல்-ரவுண்டர்கள், 1 விக்கெட் கீப்பர் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் போட்டியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

பேட்ஸ்மேன்கள் மற்றும் WK:

ஹரி நிஷாந்த், ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு (WK), டெவோன் கான்வே (WK), MS தோனி (C&WK), N ஜெகதீசன் (WK), ராபின் உத்தப்பா (WK) மற்றும் சுப்ரான்சு சேனாபதி.

ஆல்ரவுண்டர்கள்:

பகத் வர்மா, டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே

பந்துவீச்சாளர்கள்:

ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், தீபக் சாஹர், கேஎம் ஆசிப், முகேஷ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, எம் தீக்ஷனா மற்றும் பிரசாந்த் சோலங்கி

தொடக்க ஆட்டக்காரர்கள்:

இப்போது IPL 2022ல் டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து வகையான உள்நாட்டு கிரிக்கெட்டிலும் பாராட்டுகளை பெற்று வரும் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஏற்கனவே CSK அணியின் பக்க பலமாக இருந்து வருகிறார். அதனால் இந்த அணி இவரை ஏலத்தில் விடாமல் தக்கவைத்து கொண்டது. இப்போது, ருதுராஜ் மீதான பங்குகள் இந்த ஆண்டு மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர்:

ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு மற்றும் தோனி (C&WK) ஆகியோர் சிறந்த மிடில் ஆர்டர் தேர்வாக இருப்பார்கள். இதில் உத்தப்பா மற்றும் ராயுடு ஆகியோர் மிடில் ஆர்டரில் CSKக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் விளையாட்டில் அதே ஆக்ரோஷம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கேப்டன் தோனி வழக்கம் போல ஃபினிஷர்களுக்கும் மிடில் ஆர்டருக்கும் இடையே பாலமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்-ரவுண்டர்கள்:

மிடில் ஆர்டரைப் போலவே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி மற்றும் டுவைன் பிராவோ போன்ற மூன்று சிறப்பான ஆல்-ரவுண்டர்களை CSK கொண்டுள்ளது. மொயீன் அலி ஒரு வலுவான பேட்டிங் ஆல்-ரவுண்டரை ஈடுசெய்கிறார். ஜடேஜா ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக இருக்கிறார். அதேசமயம் பிராவோ ஒரு சிறந்த பந்துவீச்சு மற்றும் ஆல்-ரவுண்டராக வலம் வருகிறார். இவர்கள் மூவரும் அணியின் முக்கியமான பங்குதாரர்கள் ஆவர்.

பந்துவீச்சாளர்கள்:

பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை, CSK அணியில் அதிக மாற்றங்களை காணும் பகுதி இதுதான். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் பந்துவீச்சு இடங்களை நிர்வகித்த நிலையில், 2022 ஆம் ஆண்டு அணி ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை இழந்துள்ளது. மேலும் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக, இப்போது ஆடம் மில்னேவின் வேகத்தை CSK எதிர்பார்த்துள்ளது. இது தவிர அணியில் கிறிஸ் ஜோர்டான் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோரும் உள்ளனர். ஆனால் ஆடம் மில்னே CSK இன் முதல்-தேர்வு வேகப்பந்து வீச்சாளராகத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உத்தேச 11 அணி:
 • ருதுராஜ் கெய்க்வாட்
 • டெவோன் கான்வே
 • மொயின் அலி
 • ராபின் உத்தப்பா
 • அம்பதி ராயுடு
 • தோனி (C&WK )
 • ரவீந்திர ஜடேஜா
 • டுவைன் பிராவோ
 • தீபக் சாஹர்
 • ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
 • ஆடம் மில்னே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here