சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – மோசமான தொடக்கத்திற்கு இதுதான் காரணம்?
2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் நிலையில் அணியில் ஏற்பட்ட காயங்கள், தரமான பேக்-அப்கள் இல்லாமை மற்றும் சில முக்கிய வீரர்களின் ஃபார்ம் இழப்பு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 2022 பதிப்பில் இரண்டே இரண்டு வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் பின்தங்கி இருக்கிறது. அந்த வகையில் அவர்கள் இதுவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் மிக மோசமான வகையில் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2022 சீஸனின் லீக் சுற்றுக்கு தகுதி பெரும் பாதை இன்னும் கடினமாக மாறி இருக்கிறது. கடந்த 14 சீசன்களிலும் தனித்து நின்று பல சாதனைகளை புரிந்த CSK அணியின் இந்த திடீர் சறுக்கல் ஒவ்வொருவரிடையேயும் கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
இப்போது, CSK அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஜடேஜாவின் கேப்டன்சி பேசப்பட்டு வருகிறது. இந்த சீசனில் CSK அணியின் தலைமை பொறுப்பை கையில் எடுத்த ஜடேஜாவால் ஒரு வீரராகவும், தலைவராகவும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. மற்றபடி பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, பந்து வீச்சாளர்களால் அவர்களை ஆதரிக்க முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள் எதிரணியை துரத்தக்கூடிய ஸ்கோருக்கு கட்டுப்படுத்தும்போது, பேட்டர்கள் ஸ்கோரைத் துரத்துவதில் தோல்வியை தழுவி இருக்கின்றனர்.
அந்த வகையில் CSK அணியில் ஒரு பிளேயிங் XIக்கான நிலைத்தன்மையை பார்க்கமுடியவில்லை. மற்றபடி, 14 கோடி ஒப்பந்ததாரரான தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த சீசனை விட்டு விலகியதும் அணியை பெருமளவு பாதித்துள்ளது. அதே நேரத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட்டால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இப்போது அணியில் துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் முகேஷ் சவுத்ரி போன்ற பல புதிய இளம் வீரர்கள் காணப்பட்டாலும் ஐபிஎல் அரங்கைப் பொருத்தவரை அவர்கள் அனைவரும் அறியப்படாதவர்களாகவும் அனுபவமில்லாதவர்களாகவும் இருந்தனர்.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, CSK அணிக்காக தக்கவைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவராக இருந்தார். இந்த சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடிய அவர் பேட்டிங்குடன் சராசரியாக 17.5 என உள்ளார். இவர் இப்போது காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். தவிர போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மில்னே தொடை வலியால் பாதிக்கப்பட்டு இந்த சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதே நேரத்தில் CSK அணியின் புதிய தேர்வான சிவம் துபே பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அணிக்கு தேவையானவற்றை சிறப்பாக செய்து கொடுக்கிறார்.
Exams Daily Mobile App Download
பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் சாதனை படைத்த தீபக் சாஹருக்கு பதிலாக புனேவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் சௌத்ரி சிறப்பாக பந்துவீசியுள்ளார். அதே நேரத்தில் மகேஷ் தீக்ஷனாவும் அணியின் சிறந்த பவர்பிளே விருப்பமாக மாறி இருக்கிறார். மற்றபடி, டுவைன் பிராவோ எப்போதும் போல நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் ஃபார்மைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி பல்வேறு குழப்பத்தை கொண்டிருக்கும் CSK அணி, கேப்டன் ஜடேஜாவின் கீழ் புதிய சகாப்தத்தை கொடுக்க தவறிவிட்டது என்று தான் சொல்ல முடியும்.