IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட் – முதல் போட்டிக்கான 4 ஓவர்சீஸ் வீரர்கள்!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட் - முதல் போட்டிக்கான 4 ஓவர்சீஸ் வீரர்கள்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட் - முதல் போட்டிக்கான 4 ஓவர்சீஸ் வீரர்கள்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட் – முதல் போட்டிக்கான 4 ஓவர்சீஸ் வீரர்கள்!

வரவிருக்கும் 2022 IPL போட்டிகளில் 25 வீரர்களுடன் களமிறங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், முதல் ஆட்டத்தில், பங்கேற்ற இருக்கும் வெளிநாட்டு வீரர்களின் விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இப்போது காணலாம்.

CSK அணி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் மிகவும் வலிமை மிக்க அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இம்முறை மகேந்திர சிங் தோனி தலைமையில் 25 வீரர்களுடன் களம் காண இருக்கிறது. அந்த வகையில் 2022 IPL போட்டிக்கான CSK அணியில் தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின் அலி ஆகியோர் தக்கவைக்கப்பட, மற்ற 21 வீரர்களும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த IPL 2022 சீசனுக்காக மேற்கொள்ளப்பட்ட ஏலத்தில், CSK அணி தீபக் சாஹரை அதிக விலை கொடுத்து வாங்கியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% DA உயர்வு? மார்ச் மாதத்தில் வெளியாகும் அறிவிப்பு!

இவர்களுடன் சில சிறப்பு வாய்ந்த வெளிநாட்டு வீரர்களும் CSK அணியில் இடம்பெற்றிருப்பதால் ஒட்டுமொத்தமாக, அணி நல்ல சமநிலையில் இருப்பதாக தெரிகிறது. இவை அனைத்திற்கும் மத்தியில், பல ஆண்டுகளாக CSK அணிக்கு தனது பங்களிப்பை கொடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் மெகா ஏலத்தின் போது பேசும் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் மொத்தம் ஏழு சர்வதேச வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டெவன் கான்வே மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்த மிட்செல் சான்ட்னர் ஆகியோர் அணிக்கு சிறப்பான தேர்வாக அமைந்துள்ளனர். இதற்கிடையில், CSK அணியை சார்ந்து IPL போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன் படி, முதலாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஃபாஃப் டு பிளெசிஸுக்கு பதிலாக கான்வே முதலிடத்தில் இருக்கிறார்.

இவர் டி20 கிரிக்கெட்டில், அணியின் தேவைக்கேற்ப தனது ஆட்டத்தை மாற்றி அமைக்கும் வலிமையான வீரர் ஆவார். இப்போது CSK ஆட்டத்தில் இவர் ராபின் உத்தப்பா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் இணைந்து தொடங்குவார் என்று தெரிகிறது. அடுத்ததாக மொயின் அலி கடந்த 2021 IPL போட்டியில் CSK அணிக்காக 15 ஆட்டங்களில் விளையாடி 357 ரன்கள் எடுத்திருந்தார். அந்த வகையில் இந்த சீசனிலும் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் சுரேஷ் ரெய்னா இனி அணியில் இல்லை என்பதால், மொயின் அலி பேட்டிங் வரிசையில் நிரந்தரமாக மூன்றாவது இடத்தில் பேட் செய்ய இருக்கிறார்.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் – முழு விபரம் இதோ!

மேலும் டுவைன் பிராவோ மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் CSK இன் இரண்டு டெத் பவுலிங் விருப்பங்கள். இவர்கள் இருவரும் XI ல் பயன்படுத்தப்படலாம். இறுதியாக கிறிஸ் ஜோர்டானின் டெத் பந்துவீச்சு அணிக்கு இன்னும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெத் ஓவர்களை பிராவோ மற்றும் ஜோர்டானிடம் விட்டுவிட்டு பவர்பிளேயில் தீபக் சாஹரை களமிறக்க CSK அணி திட்டமிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!