சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – நடப்பு சீசனின் 3 சிறந்த புதுமுகங்கள்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - நடப்பு சீசனின் 3 சிறந்த புதுமுகங்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - நடப்பு சீசனின் 3 சிறந்த புதுமுகங்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – நடப்பு சீசனின் 3 சிறந்த புதுமுகங்கள்!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது. இருப்பினும் இந்த சீசனில் இந்த அணி 3 சிறந்த வீரர்களை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வரலாற்றில் முதன்முறையாக பிளேஆஃப்களுக்கு தகுதி பெறத் தவறிவிட்டது. கடந்த ஐபிஎல் 2021 ஆண்டில் நான்காவது சாம்பியன் பட்டத்தை வென்று மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருந்த சென்னை அணி இந்த சீசனில் சரியாக சோபிக்கவில்லை. அந்த வகையில், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இந்த முறை முதல் நான்கு இடங்களுக்குள் வரத் தவறிவிட்டனர். அவர்களது பிரச்சனைகள் ஆன்-ஃபீல்ட் நிகழ்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது தவிர அவர்களின் கேப்டன்சியும் தலைப்புச் செய்திகளை உருவாக்கி இருந்தது.

Exams Daily Mobile App Download

அதாவது ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ரவீந்திர ஜடேஜா இந்த சீசனுக்கான சென்னை அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் கேப்டனாக தனது அணியை ஊக்குவிக்கத் தவறிவிட்ட நிலையில் சிஎஸ்கே தனது முதல் எட்டு போட்டிகளில் ஆறில் தோல்வியடைந்தது. இதனால் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பிறகு இரண்டு போட்டிகளுக்குப் பிறகு, ஜடேஜா காயம் காரணமாக போட்டியில் இருந்தும் வெளியேறினார். மொத்தத்தில், சிஎஸ்கே அணி முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும்போது இந்த முறை ஒரு பயங்கரமான சீசனை கொண்டிருந்தது.

அந்த வகையில் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 லீக் ஆட்டங்களில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. இருப்பினும், CSK அணிக்கு சாதகமாக செல்லாத ஒரு சீசனில் ஒரு சில திறமைகளை அந்த அணி கண்டுபிடித்திருந்தது. அந்த வகையில் கடந்த காலத்தில் முத்தையா முரளிதரன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷதாப் ஜகாதி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய பல தரமான ஸ்பின்னர்களைக் கொண்டிருந்த சென்னை அணியில் இப்போது மஹீஷ் தீக்ஷனா சிறந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

இலங்கையை சேர்ந்த மர்ம சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா ஏலத்தில் வெறும் ரூ.70 லட்சத்துக்கு எடுக்கப்பட்டார். நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (RCB) எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய தீக்ஷனா தனது அணியின் முதல் வெற்றிக்கு பங்களித்தார். தற்போது 21 வயதான அவர் தனது ஒன்பது ஐபிஎல் போட்டிகளில் 7.5க்கு கீழ் சிறந்த பொருளாதார விகிதத்தில் 12 விக்கெட்டுகளை எடுத்தார். புதிய பந்தில் கூட பந்து வீசக்கூடிய நம்பகமான பந்து வீச்சாளர் தீக்ஷனா அடுத்த சீசனில் சென்னை அணியின் முக்கிய தேர்வாக இருப்பார்.

NHM நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

அடுத்தபடியாக மேத்யூ ஹெய்டன், மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன் மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸி ஆகிய சிறந்த வெளிநாட்டு தொடக்க வீரர்களின் பட்டியலில் இப்போது டெவோன் கான்வே இணைந்துள்ளார். இந்த சீசனில் கான்வே, ருதுராஜ் கெய்க்வாடுடன் இணைந்து ஒரு திடமான தொடக்க ஜோடியை உருவாக்கினார். குறிப்பாக, இந்த சீசனில் இருவரும் இணைந்து ஏழு ஆட்டங்களில் விளையாடி இரண்டு சதங்களையும் ஒரு அரைசதத்தையும் சேர்த்தனர். ஏலத்தில் ரூ.1 கோடி அடிப்படை விலையில் எடுக்கப்பட்ட கான்வே 145+ என்ற ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஏழு ஆட்டங்களில் 252 ரன்களுடன் இந்த பருவத்தை முடித்தார்.

கடைசியாக, மெகா ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவருக்கு நீண்ட கால காயம் ஏற்பட்டதால் அவர் இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகினார். அவருக்கு பதிலாக இளம் திறமையாளரான முகேஷ் சவுத்ரி ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது 25 வயதான அவர் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடினார். குறிப்பாக CSK அணியில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையையும் செய்திருக்கிறார். அந்த வகையில் இந்த சீசனில் சௌத்ரி 26 சராசரியில் 16 விக்கெட்டுகளை எடுத்தார். அவரது பொருளாதார விகிதம் 9.3 அதிகமாக இருந்தாலும், சௌத்ரி நான்கு முறை சாம்பியன் அணிக்கான சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!