சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – குஜராத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடருமா அணி?

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - குஜராத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடருமா அணி?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - குஜராத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடருமா அணி?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – குஜராத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடருமா அணி?

தொடர்ந்து நான்கு தோல்விகளை குவித்து வைத்திருக்கும் சிஎஸ்கே அணி இன்று இரவு குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

GT vs CSK

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சிஎஸ்கே அணி குவித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக மும்பை அணியும் தொடர்ந்து நான்கு தோல்விகளை குவித்து வைத்திருந்தது. அந்தவகையில் கடந்த வாரம் பெங்களூர் அணியுடன் மோதி சிஎஸ்கே முதல் வெற்றியை பதிவு செய்தது. பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே அணி நுழைய வேண்டுமானால் எஞ்சி இருக்கும் அனைத்து ஆட்டங்களையும் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இப்படி திறமையான வீரர்களை வைத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே அணி தோற்கடிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

IPL 2022 RR Vs GT: 4வது வெற்றி யாருக்கு? இன்றைய ஆட்டத்திற்கான முன்னோட்டம்!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா 228 ரன்களையும், சுப்மான் கில் 200 ரன்களையும் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இந்த திறமையான வீரர்களை சிஎஸ்கே வீரர்கள் வென்றுவிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிராக அரைசதம் வீழ்த்திய ராபின் உத்தப்பா, ஷிவம் துபே ஆகியோர் நினைத்தால் கண்டிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடிக்க முடியும். இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சிஎஸ்கே அணிக்கும் குஜராத் அணிக்கும் நடக்கவிருக்கும் கடுமையான போட்டியை காண ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!