சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வழக்கு, 2 பேர் சஸ்பெண்ட் – விசாரணை தீவிரம்!

0
சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வழக்கு, 2 பேர் சஸ்பெண்ட் - விசாரணை தீவிரம்!
சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வழக்கு, 2 பேர் சஸ்பெண்ட் - விசாரணை தீவிரம்!
சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வழக்கு, 2 பேர் சஸ்பெண்ட் – விசாரணை தீவிரம்!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக வெளியான வீடியோ பதிவுகளை வைத்து தற்போது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

விசாரணை தீவிரம்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழக குடிசை மாற்று வாரியம் சார்பில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதாவது 864 வீடுகள் அடங்கிய இந்த அடுக்குமாடி கட்டிடம் கடந்த 2016 ஆம் ஆண்டில் முந்தைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு செலவான மொத்த தொகை ரூ.112 கோடியே 60 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் இந்த கட்டிடத்தை தொட்டால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதும், மணல் சிதறுவதும், சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் முழுமையான விதத்தில் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியானது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகரின் ஒருநாள் சம்பளம் – பையோகிராபி!

இதையடுத்து கட்டிடம் தொடர்பான தீவிர விசாரணையில் அரசு ஈடுபட்டு வந்தது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் அரசுக்கு கோரிக்கைகளை வைத்துள்ளனர். தவிர அந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

TCS நிறுவன ஊழியர்கள் WFH முறையில் பணியை தொடர அனுமதி – CEO தகவல்!

இதையடுத்து இந்த குடியிருப்பு கட்டிடத்தை தற்போதுள்ள குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் கட்டிடத்தின் தரத்தை மதிப்பிட சிறப்பு குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் சட்டமன்ற பேரவையில் எதிரொலித்தது. இது தொடர்பாக தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட கட்டிட பணியில் ஈடுபட்ட பாண்டியன், அன்பழகன் என்ற 2 உதவிப் பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து கட்டிடத்தின் உறுதித்தன்மையை IIT குழுவினர் இன்று (ஆகஸ்ட் 20) ஆய்வு செய்ய உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!