சென்னை: திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலியாக கடந்த வாரம் முழுதும் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வந்தனர், இருப்பினும் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு:

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆபரணத் தங்க விற்பனை எப்போதும் அதிகம் தான்.

TN Job “FB  Group” Join Now

மேலும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். சில நாட்களாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

மே 25 முதல் ஜூன் 20 வரை கோடை விடுமுறை அறிவிப்பு – அரசின் முக்கிய உத்தரவு!

எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.21 குறைந்து ரூ.5,029க்கும், 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.40,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.09க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து உள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!