சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதி – இன்று (அக். 26) முதல் அமல்!

0
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதி - இன்று (அக். 26) முதல் அமல்!
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதி - இன்று (அக். 26) முதல் அமல்!
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதி – இன்று (அக். 26) முதல் அமல்!

சென்னையில் இன்று (அக். 26) முதல் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வர இருக்கிறது. அதனால் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விதிகளை பற்றியும், அதற்கான அபராதம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய போக்குவரத்து விதி:

கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவித்தது. இந்த புதிய வாகன திருத்த சட்டம் வருகிற அக். 28 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று (அக். 26) முதல் புதிய வாகன திருத்த சட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதன் படி சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுவான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது அதிவேகமாக சென்றால் ரூ. 1000 அபராதமாகவும், இரண்டாவது முறை அதே தவறை செய்பவர்களுக்கு ரூ.10000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஸிங் செய்தால் ரூ. 1000 வசூலிக்கப்படும்.

கோபியை வெட்ட போகும் எழில், கெஞ்சி சமாதானம் செய்யும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆனால் இப்போது அபராத தொகை ரூ. 15000 முதல் ரூ. 20000 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றால் முன்னதாக ரூ. 100 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ. 1000மாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இன்று (அக். 26) முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!