சென்னை மாநகர பொது மக்கள் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

0
சென்னை மாநகர பொது மக்கள் கவனத்திற்கு - போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!
சென்னை மாநகர பொது மக்கள் கவனத்திற்கு - போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!
சென்னை மாநகர பொது மக்கள் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் நகரில் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.

மெட்ரோ ரயில்:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக உள்ள தொழில்நுட்பங்கள் நிறுத்தப் பட்டது. அதில் முக்கிய ஒன்றாக ரயில்வே துறை உள்ளது. மேலும் கொரோனா காலத்தில் இந்த ரயில் பயணம் இல்லாமல் பொது மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வழி போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் ரயில் போக்குவரத்தும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகத்திலேயே மெட்ரோ ரயில் சென்னை மாநகரில் மட்டுமே இருந்து வருகிறது. இந்த ரயில் அனுதினமும் வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் சென்னை மாநகர போக்குவரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து உள்ளனர். அது குறித்து கீழே வரும் தொகுப்பில் பார்ப்போம். மேலும் இந்த மாற்றத்திற்கான தகவலை ஆவடி ஆணையரக போலீசார் வெளியீட்டு உள்ளார்.

Wipro நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – உடனே விரையுங்கள்..!

இந்த செய்தி குறிப்பில் ஆணையர் கூறியதாவது, மெட்ரோ ரயிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று முதல் மே 9 ஆம் தேதி வரை சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரையும், அதை தொடர்ந்து, ஆவடி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச்சாலை வழி சாலையில், சென்னிர்குப்பம் சென்று இடது புறமாக இலக்கை அடையலாம். தொடர்ந்து 3 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் நடைமுறைக்கு சரியாக வந்தால் தொடர்ந்து இதே நிலையில் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று ஆணையர் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இதனை கவனத்தில் வைத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!