சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – இன்று முதல் நேரம் நீட்டிப்பு!
தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் புதிய நேர நீட்டிப்பும் அமலுக்கு வருகிறது.
மெட்ரோ ரயில் சேவை:
தமிழகத்தில், அதுவும் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் என்பது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு மக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் சேவை இயக்கம் குறித்த தகவல் வெளியாகி, சென்னை நகர பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இனி திங்கள் கிழமையான இன்றிலிருந்து மெட்ரோ ரயில் சேவையானது காலை 5.30 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பு என்பது பயணிகள் வேண்டுகோளை பரிசீலனை செய்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளிகளிலும் ரயில் சேவை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது தவிர அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் முறையாக பின்பற்றி, இதோடு சேர்த்து அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி முகக்கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.