தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தெற்கு ஆந்திரா பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து கொண்டு வருகிறது. மேலும் நேற்று சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இரவில் சுமார் 5 மணி நேரம் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதனால் விமான சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் தெற்கு ஆந்திரா பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தெற்கு ஆந்திரா பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, 20.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜூலை 18 முதல் கோடை விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

22.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.06.2022, 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

20.06.2022: கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

21.06.2022, 24.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

22.06.2022, 23.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!