சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – ரூ.37,336 க்கு விற்பனை!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு - ரூ.37,336 க்கு விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு - ரூ.37,336 க்கு விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – ரூ.37,336 க்கு விற்பனை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மிகவும் சரிவடைந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்ந்துள்ளது. இதனால், நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதும், திடீரென குறைவதுமாய் இருந்து வருகிறது. அதாவது, திடீரென தங்கத்தின் விலை அதிரடியாய் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் சமயத்தில் மறுநாளே தங்கத்தின் விலை உயர்ந்துவிடுகிறது. மேலும், கடந்த மாதம் முழுக்கவே தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது. ஆனால், இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை தான் சந்தித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆனாலும், தாய்மார்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய தான் விரும்புகின்றனர். நேற்று மட்டுமே சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.4,658க்கு விற்பனையாகி வந்தது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.60.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.60,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிரடியாய் தங்கத்தின் விலை குறைந்ததால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ஒரே நாளில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துவிட்டது.

TNPSC குரூப் 4 தேர்வு மையம் அதிரடி மாற்றம் – தேர்வாணையம் உத்தரவு!

அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9 அதிகரித்து ரூ.4,667 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.30 காசு உயர்ந்துரூ.61.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை 72 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் சோகமடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here