சென்னை: தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் ஆபரண தங்க விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் ஆபரண தங்க விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் ஆபரண தங்க விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து நகைப்பிரியர்களை சுற்றலில் விட்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ.37,500 ஐ தாண்டி உள்ளது. அதன் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததும் விலை உயர்விற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் ஒவ்வொன்று மீதும் தனி ஈர்ப்பு இருக்கும். அது போல பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் குறிப்பாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக தங்க நகைகளை அணிந்து கொள்வது என்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இப்பேற்பட்ட தங்க அணிகலன்களை வாங்குவது அவ்வளவு சுலபமும் கிடையாது. ஏனெனில் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒவ்வொரு கிராமும் எக்கச்சக்க விலையில் விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூலை 1ல் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது. இதனால் தங்கம் விலையும் எதிர்பாராத விதமாக அதிரடி உயர்வை சந்தித்தது. இவ்வாறு இறக்குமதி வரி அதிகரித்த அந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதும் என மாறி மாறி காணப்பட்டது.

திருப்பதி கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் அங்கப்பிரதட்சிண டோக்கன் விநியோகம்!

அதன்படி நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,680க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440க்கு விற்பனையும் ஆனது. ஆனால் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை வழக்கம் போல் கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,696-க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.37,568க்கும், விற்பனை ஆகி இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அதற்கு அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் உச்சம் அடைந்து விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here