சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

0
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போய் உள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு:

கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் எதிர்கால பாதுகாப்பிற்காக ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்ந்து கொண்டுதான் இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மேலும் ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிரடியாகக் குறைந்து சவரன் ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.4,715-க்கு விற்பனையாகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!