தமிழக அறநிலையத்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

0
தமிழக அறநிலையத்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழக அறநிலையத்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழக அறநிலையத்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் நிதியை எடுத்து வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அறநிலையத்துறை செலவுகள்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் திரட்டப்படும் நிதியை அறநிலையத்துறையின் தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களில் கிடைக்கும் நிதியை வைத்து கல்லூரிகள் துவங்குவதாகவும், விடுதிகள் கட்டுவதாகவும், வேறு சில தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

TN TET 2023 தேர்விற்கான Study Material – குறைந்த விலையில் மட்டுமே! Buy Now!

Follow our Instagram for more Latest Updates

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில்களில் திரட்டப்படும் நிதியை அறநிலையத்துறையின் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும், கோவில் வளங்களை அரசு பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!