தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்!

0
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை மேற்கொள்வதற்கு தடை விதித்து அப்போது இருந்த அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு தடை

இந்த காலகட்டத்தில் பலரது கைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு போன்கள் அவர்களது அன்றாட வாழ்க்கையை முடக்கி விடுகிறது. இந்த ஆண்ட்ராய்டு போன்கள் அவசியமானது என்றாலும் இதில் சில அத்தியாவசியமற்ற காரியங்களும் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் விளையாட்டுகள். அதாவது பப்ஜி, பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளினால் பலரும் அடிமைப்பட்டு கேமிங் உலகிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 99.04% பேர் தேர்ச்சி!

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் உடலளவிலும், மனதளவிலும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரம்மி என்று சொல்லக்கூடிய ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு தமிழகத்தில் தடை விதித்து அபோது ஆட்சியில் இருந்த அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விளையாட்டினால் பலர் தங்களது பணத்தை இழக்க நேரிட்டதால் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ஜாங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மொத்தமாக தடை விதிக்க முடியாது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!