தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு!

தமிழகத்தில் பள்ளிகளை மூட வேண்டும் என்று மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இது காலாவதியான வழக்கு என கூறி முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளை மூட வழக்கு:

தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவித்தது. மாணவர்கள் கல்வியை தொடர ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி மற்றும் விதிமுறைகளை பின்பற்றியதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. மேலும் அனைவரும் கொரோனா நோய் தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தி கொண்டு 3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Amazon Prime பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – டிச.13 முதல் சந்தா கட்டணம் உயர்வு!

இவ்வாறு நோய் கட்டுக்குள் வந்ததால் செப்.1 முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து திருநெல்வேலி வழக்கறிஞர் அப்துல் வகாபுதீன், கொரோனா 3வது அலை வர இருப்பதால் 9-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி காய்கறிகளும் விற்பனை!

இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் வாதாடிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, நவ.1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என தெரிவித்தார். அதனால் நீதிபதிகள் இவ்வழக்கு காலதாமதமாகி விட்டது என்பதால் வழக்கு முடிக்கப்படுகின்றது என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here