சென்னை: ஒரே நாளில் தங்க விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: ஒரே நாளில் தங்க விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: ஒரே நாளில் தங்க விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: ஒரே நாளில் தங்க விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.37,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.160 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது. கொரோனா கட்டக்கட்டத்தில் இருந்து தான் தங்கத்தின் விலை சட்டென்று அதிகரித்தது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கத்தின் விலை அதிகரிக்கிறதே என தாய்மார்கள் வருத்தப்படுகிறார்களே தவிர தங்கத்தின் மீதுள்ள ஆசை மட்டும் குறைவதே இல்லை. வங்கிகளில் பணம் சேமிப்பதை விட தங்க நகைகளில் முதலீடு செய்வதை தான் பாதுகாப்பானதாகவும், அதிக லாபம் தரும் திட்டமாகவும் எண்ணுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை திடீரென பலமடங்காக உயர்கிறது மற்றும் அப்படியே தங்கத்தின் விலை சரிகிறது. இந்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் தான் விலையேற்றம் மற்றும் விலையிறக்கம் ஏற்படுகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,755 க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.00 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து ரூ.4,775 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 1ரூபாய் உயர்ந்து ரூ.67க்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.67000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியதால் மக்கள் கவலையில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here