சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. அத்துடன் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிகளவு குறைத்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தங்கத்தின் விலை குறைவு

கொரோன கால கட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக அரசு அறிவித்திருந்தது. அதன் காரணமாக பொது மக்கள் தங்கள் வருவாயை இழந்தனர். அதனால் தற்போது தங்கள் முதலீடுகளை பாதுகாப்பான முறையில் செலுத்த தொடங்கினர். அத்துடன் பங்குச்சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் என இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கின. அத்துடன் நிதி நெருக்கடி காலங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன்களை சுலபமாக பெற்றுக் கொண்டனர். அதனால் பொது மக்கள் தங்கத்தையே பெருமளவு வாங்க தொடங்கினர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் பொங்கல் பரிசு – விரைவில் அறிவிப்பு!

மேலும் வெளிநாட்டில் உள்ள முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முழு கவனம் செலுத்தினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. அத்துடன் விலையும் அதிகரித்தது. தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. நேற்று தங்கத்தின் விலை ரூ.2 குறைந்து கிராம் ரூ.4,596- க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சவரனுக்கு 36,768-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,574 என்றும் சவரனுக்கு ரூ.36,592 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் பொங்கல் பரிசு – விரைவில் அறிவிப்பு!

இதே போல் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.66 ஆக விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்றைய வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.65.50 என விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.6550 என்று விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!