சென்னைவாசிகள் கவனத்திற்கு – சுத்தம் செய்யும் பணி! மாநகராட்சி தகவல்!!

0
சென்னைவாசிகள் கவனத்திற்கு - சுத்தம் செய்யும் பணி! மாநகராட்சி
சென்னைவாசிகள் கவனத்திற்கு - சுத்தம் செய்யும் பணி! மாநகராட்சி
சென்னைவாசிகள் கவனத்திற்கு – சுத்தம் செய்யும் பணி! மாநகராட்சி தகவல்!!

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக பெருநகர மாநகராட்சி அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சுத்தம் செய்யும் பணி

சென்னை போன்ற பெருநகரங்களை தூய்மையாக பராமரிப்பது என்பது கடினமான காரியமாகும். பகல் நேரங்களில் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்ற சூழ்நிலைகள் காரணமாக சாலைகளை தூய்மையாக பராமரிக்கும் பணிகளில் சிரமங்கள் காணப்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு, மாநகராட்சி சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என்ற அடிப்படையில் 78 வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், மாநகரின் முக்கியமான உட்புற சாலைகளையும் சுத்தம் செய்யவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!