தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் – சென்னை புத்தக கண்காட்சி பிப்.16 முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் - சென்னை புத்தக கண்காட்சி பிப்.16 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் - சென்னை புத்தக கண்காட்சி பிப்.16 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் – சென்னை புத்தக கண்காட்சி பிப்.16 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

புத்தக கண்காட்சி

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இதில் குறிப்பாக சென்னையில் ஜனவரி மாதம் பபாசி சார்பில் நடைபெற இருந்த புத்தகக் காட்சி கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன் காரணமாக வாசகர்களுக்காக அச்சடிக்கப்பட்ட சுமாா் ரூ.100 கோடி அளவிலான புத்தகங்கள் விற்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து பபாசி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அரசுக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

தமிழக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னையில் வருகிற பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை 45வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

மேலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. இதில், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் புத்தக கண்காட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த புத்தக கண்காட்சிக்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டை ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி கொடுக்க வேண்டும். இதன் மூலமாக கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here