தமிழகத்தில் எதெற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் – தவறாமல் படிங்க!

1
தமிழகத்தில் எதெற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் - தவறாமல் படிங்க!
தமிழகத்தில் எதெற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் - தவறாமல் படிங்க!
தமிழகத்தில் எதெற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் – தவறாமல் படிங்க!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் எதெற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் என்றும் அதை யார் விண்ணப்பிக்க முடியும் என்பதற்கான முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இ-பாஸ்:

தமிழகத்தில் வருகிற 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 3ல் இடம் பெற்றிருக்கும் 4 மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு கூகுள் புதிய திட்டம் – புதிய முயற்சிகள் வரவேற்பு!!

ஆனால் வகை 2 ல் இடம் பெற்றிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை டாக்சிகளில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வகை 2 மற்றும் 3ல் இடம்பெற்றிருக்கும் 27 மாவட்டங்களில் திருமண நிகழ்வுகளுக்காக வேறு மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது திருமண நிகழ்வுகளுக்கு அனைவராலும் இ-பதிவு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரால் மட்டுமே இ-பதிவு பதிவு செய்ய முடியும் என்றும் ஒரு நிகழ்வுக்கு ஒரே ஒரு இ-பாஸ் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் திருமண நிகழ்வுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு விண்ணப்பம் மேற்கொள்ள அரசின் அதிகாரபூர்வ தளமான https://eregister.tnega.org/#/user/pass என்ற தளம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடு காலி செய்து பொருட்களை சரக்கு வாகனம் மூலம் எடுத்து செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சரக்கு வாகனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!