மாநில முதல்வருக்கு சவுக்கடி – கோயிலில் வினோத வழிபாடு… மக்களின் நம்பிக்கை!

0
மாநில முதல்வருக்கு சவுக்கடி - கோயிலில் வினோத வழிபாடு... மக்களின் நம்பிக்கை!
மாநில முதல்வருக்கு சவுக்கடி - கோயிலில் வினோத வழிபாடு... மக்களின் நம்பிக்கை!
மாநில முதல்வருக்கு சவுக்கடி – கோயிலில் வினோத வழிபாடு… மக்களின் நம்பிக்கை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மாநில மக்களின் நலனுக்காக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அம்மாநிலத்தின் கவுரி கவுரா பூஜையில் பங்கேற்றார். அக்கோயில் விழாவில் கலந்து கொண்டு ஒரு வினோத சடங்கினை மேற்கொண்டுள்ளார்..

சவுக்கடி:

இந்திய மாநிலம் சத்தீஷ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பூபேஷ் பாகல் அம்மாநில வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காவும் பல திட்டங்களை தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவர் முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கு 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தினார். தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து மாணவர்களின் நலனிலும் அவர்களது கல்வியிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் அவர்களை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கவுரவப்படுத்தினார். அத்துடன் பிற பகுதிகளில் பயணம் மேற்கொண்ட அவர் கோவிலில் நடைபெற்ற கவுரி கவுரா பூஜையில் கலந்து கொண்டார்.

500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சன் டிவியின் Non Prime Time சீரியல் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

Exams Daily Mobile App Download

அக்கோயில் பூஜையின் முக்கிய நிகழ்வாக சவுக்கடி சடங்கு நடைபெற்றது. இது அக்கோயிலின் ஒரு வகையான வினோத வழிபாடாகும். இதில் கலந்து கொண்ட முதல்வருக்கு சொந்தா என்ற சவுக்கை கொண்டு வலது கையில் ஓங்கி அடிக்கபட்டது. இந்த சடங்கை முதல்வர் அமைதியாக நிறைவேற்றினார். கோயில் மேள, தாளங்கள் மற்றும் இசைக்கருவிகளின் ஓசையில் கிடைக்கின்ற இந்த சவுக்கடியானது ஆசி மற்றும் வளங்களை தரும் என்பது அம்மாநில மக்களின் பெறும் நம்பிக்கையாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!