வளர்ந்து வரும் Chat GPT .. போட்டிக்கு குவியும் செயலிகள் – வேலைவாய்ப்பு, பொருளாதாரம் கேள்விக்குறி!

0
வளர்ந்து வரும் Chat GPT .. போட்டிக்கு குவியும் செயலிகள் - வேலைவாய்ப்பு, பொருளாதாரம் கேள்விக்குறி!
வளர்ந்து வரும் Chat GPT .. போட்டிக்கு குவியும் செயலிகள் - வேலைவாய்ப்பு, பொருளாதாரம் கேள்விக்குறி!
வளர்ந்து வரும் Chat GPT .. போட்டிக்கு குவியும் செயலிகள் – வேலைவாய்ப்பு, பொருளாதாரம் கேள்விக்குறி!

உலக அளவில் Chat GPT எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரம் எதிர்மறை கருத்துக்களும் வந்த வண்ணம் உள்ளது.

Chat GPT :

கடந்த நவம்பர் மாதம் (Open IA) Chat GPT எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே எதிர்பாராத அளவு பிரபலம் அடைந்தது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கிய அம்சம் என்னவெனில் பயனர்களின் கேள்விக்கு துல்லியமாக பதில் அளிக்கிறது.

தமிழகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு திருவிழா – 1,18,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. அமைச்சர் பேட்டி!

இந்த Chat GPT பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனை கருத்தில் கொண்டு பல நாடுகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் Chat GPTதடையை செய்துள்ளது. இது மாணவர்களின் செயல் திறன் மற்றும் அறிவு சார் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். மேலும் இது இளைஞர்களிடம் தேடலை குறைத்து விடும் என்றும் வேலை இழப்பிற்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மற்றொரு புறம் Chat GPT வரும் காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் பொருளாதார ரீதியாக மாற்றங்களை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதே போல கூகுள் நிறுவனம் bot என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சீனா செயற்கை நுண்ணறிவு செயலி வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது . வரும் மார்ச் மாதம் சீன செயலி வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!