இனி வாட்ஸ்அப்பில் Backup இலவசம் கிடையாது – புதிய அப்டேட்!!
தற்போது வரையிலும் இலவசமாகவே Chat history Backup செய்யப்பட்டு வந்த நிலையில் இனி இலவசமாக வழங்கப்படாது.
Backup:
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு மொபைலில் WhatsApp chat history backup செய்யும் போது Google கணக்குகளில் விவரங்கள் சேகரிக்கப்படும். அதாவது, நீங்கள் backup செய்யும் விவரங்கள் அனைத்தும் கூகிளின் 15GB சேமிப்பு வரம்பின் கீழ் வரும்.
தபால் அலுவலக கணக்கு திட்டங்களில் புதிய திருத்தம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!!!
இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் இலவசமாக chat history backup செய்ய முடியாது. இது வாட்ஸ்அப் பயனர்களை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15GB ஐ காட்டிலும் கூடுதலாக சேமிப்பு வரம்பு தேவைப்பட்டால் உங்களது வாட்ஸ்அப் மீடியாவை நீக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.