LPG சிலிண்டர் விலை முதல் PF தொகை வரை – டிச.1 முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!

0
LPG சிலிண்டர் விலை முதல் PF தொகை வரை - டிச.1 முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!
LPG சிலிண்டர் விலை முதல் PF தொகை வரை - டிச.1 முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!
LPG சிலிண்டர் விலை முதல் PF தொகை வரை – டிச.1 முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!

2021 ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ளது. தற்போது நடப்பு ஆண்டின் கடைசி மாதமான டிசம்பருக்கு வந்து விட்டோம். இந்த நிலையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஒரு சில மாற்றங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

டிச.1 முதல் மாற்றம்:

இந்தியாவில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு சமையல் சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் மாதந்தோறும் சிலிண்டர் வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் மத்திய அரசு தரும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 2 முறை சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி டிசம்பர் 1 வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்படுமா? என்று மக்கள் எதிப்பார்த்து வருகின்றனர்.

மத்திய அரசின் PM KISAN ரூ.6000 உதவித்தொகை – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

அதனை தொடர்ந்து விழாக்காலங்களை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன், வாகன கடன் போன்ற கடன்களை வழங்கியது. இந்த கடன் சலுகைகள் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இனி அடுத்து புது வருடம் வரவிருப்பதால் வங்கிகள் அடுத்த புதிய கடன் சலுகைகளை அறிவிக்கும். எனவே வாடிக்கையாளர்கள் வரவிருக்கும் சலுகைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு கடன் பெறலாம். அடுத்ததாக கிரெடிட் கார்டு முறையில் மாற்றங்கள் வரவுள்ளது. அதாவது வங்கிகள் இனிமேல் கிரெடிட் கார்டு ஈஎம்ஐகளுக்கு ப்ராசஸிங் கட்டணத்தை வங்கிகள் வசூல் செய்யவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – புதிய சம்பளம் கணக்கீடு!

தற்போது வரை வட்டி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது செயலாக்க கட்டணம் வசூலித்தால் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு செலவு அதிகமாகும். மேலும் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருங்காலத்தில் பிஎப் தொகையை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். அதனை தொடர்ந்து ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 உடன் கால அவகாசம் முடிவடைகிறது. வீட்டிலிருந்தே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் இதனை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் மாதந்தோறும் பென்சன் தொகை கிடைப்பது சிரமம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!