வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுவதில் மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!!
தமிழகத்தில் நவ.18,19 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்:
இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகள் செய்வதற்கான பட்டியல் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நவ. 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவ.4,5 ஆகிய 2 நாட்களும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
வேகமாக பரவும் புதிய கொரோனா தொற்று.. மீண்டும் ஊரடங்கு? – எச்சரிக்கும் அரசு!
ஆனால், நவ.18,19 ஆம் தேதி நடைபெறும் முகாமில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் வாக்காளர் முகாம் நடைபெறுவதற்கு பதிலாக நவ.25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெறும் என தமிழக தேர்தல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.