தமிழகத்தில் ரேஷன் கார்டு பிரிவுகள் மாற்றம் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் ரேஷன் கார்டு பிரிவுகள் மாற்றம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டு பிரிவுகள் மாற்றம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டு பிரிவுகள் மாற்றம் – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ரேஷன் கார்டு பிரிவுகளை பொறுத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பலரும் ரேஷன் கார்டுகளை மாற்றி வருவதால், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு பிரிவுகள்

தமிழகத்தில் திமுக கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், பலரும் தங்களது ரேஷன் அட்டைகளை மாற்றி வருகின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அடிப்படை பணி விபரங்கள் – இணை இயக்குனர் உத்தரவு!

அதாவது தமிழகத்தில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC ஆகிய 5 வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் PHH, PHH-AAY, NPHH உள்ளிட்ட 3 வகையான ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டைகளில் PHH- AAY மற்றும் NPHH என குறிப்பிடப்பட்டிருந்தால் 35 கிலோ அரிசி உள்பட மற்ற அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர ரேஷன் அட்டைகளில் NPHH-S என்று இருந்தால் அரிசி தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் NPHH-NC என கொடுக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கொடுக்கப்பட மாட்டாது. இவ்வகையான ரேஷன் அட்டைகளை அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி அரசு தரும் சேவைகளை பெற்றுக்கொள்ள பலர் தங்களது ரேஷன் அட்டைகளை மாற்றும் நோக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டு பிரிவுகளை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிய குடும்ப அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், ‘தமிழக முதல்வரின் உத்தரவின் படி, புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு வரும் 15 நாட்களுக்குள்ளாக புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். மேலும் ரேஷன் அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவைகளுக்கு இணையவழியாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டுகளில் பிரிவுகளை மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரிவு மாற்றம் செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here