ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!!

1
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!!

ஆன்லைன் மூலம் நாட்டு மக்கள் தங்களது ஆதார் கார்டில் முகவரியை எவ்வாறு மாற்ற இயலும் என்பதற்கான எளிய வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வழிமுறைகள் மக்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.

ஆதார் கார்டு:

இந்திய நாட்டு மக்கள் மத்தியில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. வங்கி சேவை முதல் மொபைல் எண் வாங்கும் பணிகள் வரை என அனைத்து சேவைகளுக்கும் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் பல தரப்பு மக்களுக்கு ஆதார் கார்டுகளில் பல்வேறு பிழைகள் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடகை இல்லங்களில் வசிப்பவர்களுக்கு பல முறை முகவரி மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் சேருவதற்கு வயது தளர்வு – கல்வி இயக்குநரகம் உத்தரவு!

இதனால் அவர்கள் இ-சேவை மையங்களில் நெடு நேரம் காத்து வருகின்றனர். தற்போது இந்த நிலையை தவிர்க்கும் வகையில் புதிய வழிவகை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டுகளில் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வது என்பதற்கான வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வழிமுறைகள் மக்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது.

ஆன்லைன் மூலம் ஆதரில் முகவரி மாற்றும் வழிமுறை:
  • அதிகாரபூர்வ ஆதார் வலைத்தளமான uidai.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்பு முகப்பு பக்கத்தில் இருக்கும் எனது ஆதார் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதை அடுத்து ஆதார் புதுப்பிப்பு என்னும் ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். அதில் ஆன்லைன் புதுப்பிப்பு என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து ஆதார் சுய சேவை பக்கம் திறக்கும். அதில் Proceed to Update Aadhaar என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக பயனர்கள் தங்களது ஆதார் அட்டை எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்சா உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். பின்பு தங்களது மொபைல் எண்ணிற்கு வரும் OTP ஐ பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக வரும் பக்கத்தில் புதுப்பிப்பு என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் முகவரி என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து, தங்களது புதிய முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் அதற்கான உரிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து பயனர்கள் Proceed என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். சில தினங்களில் உங்கள் ஆதார் முகவரி மாறிவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!