தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்ட மாற்றம் – பள்ளிகல்வி ஆணையர் சுற்றறிக்கை!

0
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்ட மாற்றம் - பள்ளிகல்வி ஆணையர் சுற்றறிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்ட மாற்றம் - பள்ளிகல்வி ஆணையர் சுற்றறிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்ட மாற்றம் – பள்ளிகல்வி ஆணையர் சுற்றறிக்கை!

தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது தொழிற்கல்வி பாடத்திட்டம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து பாடத்திட்டம் மறு சீரமைப்பு குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தொழிற்கல்வி:

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் கொண்டு வரபட்டது டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின் சாதனங்களும் பழுது பார்த்தல் போன்றவை கற்பிக்கப்பட்டது. இந்த பாடங்களை நடத்துவதற்கு மத்திய அரசு நிதி வழங்கியது. இந்நிலையில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் 9, 10ம் வகுப்புகளுக்கு திடீரென தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

அதில் மேல்நிலை வகுப்புகளில் நடத்தப்படும் தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு கழகத்தின் உறு துணையுடன் தொழிற்கல்வி பாடத்திட்டங்களை மறுசீரமைக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்படும். இக்குழுவின் மூலம் அடிப்படை இயந்திரவியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், நெசவியலும், ஆடை வடிவமைப்பும், செவிலியம், வேளாண் அறிவியல், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியலும், தணிக்கையியலும் உள்ளிட்ட 8 பாடங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வேலை தொடர்பான போலி தகவல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இத்தகைய மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை வளப்படுத்தும் படி இருக்கும். மேலும் மாணவர்கள் படித்து முடித்த உடனேயே பணிகளுக்கு செல்ல ஏதுவாக தொழிற் சார்ந்த திறன்களை பெற்றுள்ளார் என்ற தகுதி சான்றிதழ் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தாண்டு முதல் வேலைவாய்ப்பு திறன் என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுரைகளை பின்பற்றி தொழிற்கல்வி பாடங்களை நடத்துமாறு பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here