விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரின் தேர்வில் மாற்றம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரின் தேர்வில் மாற்றம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரின் தேர்வில் மாற்றம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரின் தேர்வில் மாற்றம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்கியுள்ளது, வின்னர் யார் என்பது குறித்த பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், புது தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

டைட்டில் வின்னர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வாக்கியம் இந்த சீசனில் அதிக அளவில் நடந்து வருகிறது. ரசிகர்கள் அடுத்தபடியாக இது தான் நடக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் போது அதற்கு நேர்மாறான விஷயங்கள் தான் நடக்கும். 5 வது சீசனில் போட்டியாளர்களின் எண்ணிக்கை முதல் வைல்டு கார்டு என்ட்ரி வரை அனைத்தும் இதுவரை இல்லாத புது மாற்றமாக இருந்து வந்தது. தற்போது இறுதி வாரத்தில் நிகழ்ச்சியின் சுவாரசியம் அதிகரிக்கும் வகையில் பலவிஷயங்கள் செய்யப்பட்டு வந்துள்ளது.

ரோஷினி, அம்மு அபிராமி & மனோபாலாவுடன் துவங்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 – ரசிகர்கள் உற்சாகம்!

இறுதி போட்டியாளர்களாக அமீர், நிரூப், பாவணி, ப்ரியங்கா, ராஜு போன்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இந்த வார இறுதியோடு நிகழ்ச்சியின் ஃபினாலே நடக்க இருக்கிறது. இதோடு தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் இறுதியில் யார் ஜெயிப்பார்கள் என்ற யூகம் மக்கள் மத்தியில் இருக்கும். அதன்படி தான் பெரும்பாலும் வின்னரும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இறுதி வரை யார் ஜெயிப்பார்கள் என்று யாராலும் கணிக்க முடியாமல் இருந்தது.

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?

ஆனால் கடந்த வாரம் முதல் உறுதியாக அனைவரும் ராஜு அல்லது ப்ரியங்கா இருவரில் ஒருவர் தான் ஜெயிப்பார்கள் என்று கூறிவந்தனர். ஆனால் அதிக அளவிலானவர்கள் ராஜுவிற்கு சப்போர்ட் செய்வதால் ராஜு தான் டைட்டில் வின்னர் என்று தகவல் பரவி வந்தது. ஆனால் உறுதியாக பிரியங்காவை தான் சேனல் மற்றும் ரசிகர்கள் சேர்ந்து டைட்டில் வின்னராக மாற்ற இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரபூர்வ தகவலாக இல்லாமல் இருப்பதால் நிகழ்ச்சியின் இறுதியில் தான் யார் வின்னர் என்பதை உறுதியாக கூறமுடியும் என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here