16 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் – ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

0
16 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் - ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!
16 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் - ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!
16 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் – ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையில் இருக்கும் ரயில்வே பாலத்தில் வருகிற 4ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இந்த வழியில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் கவனத்திற்கு

தமிழகத்தில் அவ்வப்போது ரயில்வே பாலத்தில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில்வே பாலத்தில் வருகிற 4ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்களின் இயக்க நேரம் மாற்றப்படுவதாக சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை பயணிகள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பில்,

  • ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.
  • எர்ணாகுளம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (12678) எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக 12.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கத்தை விட 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
  • கோவை -சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) கோவை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு பதிலாக 4.35 மணிக்கு புறப்படுகிறது.
  • கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் (12676) ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கத்தை விட 1.30 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

வருகிற வருகிற 4ம் தேதி அன்று கீழ்க்கண்ட 9 ரயில்கள் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்பட உள்ளது.

  • சென்னை சென்ட்ரல்- மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22637) 20 நிமிடமும், டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (18189) 20 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.
  • திருவனந்தபுரம் – செகந்தராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (17229) 20 நிமிடமும், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679) 20 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.
  • ராஜ்கோட் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16613) 1.30 நிமிடமும், கொச்சுவேலி- கோர்பா எக்ஸ்பிரஸ் ரயில் (22648) 40 நிமிடமும், பெங்களூர் கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (22665) 45 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.
  • திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22615) 20 நிமிடமும், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (12695) 15 நிமிடமும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here