மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் சந்திராயன் -3?? இஸ்ரோ புதிய அப்டேட்!!
இந்தியாவின் சந்திராயன் -3 விண்கலத்தை செலுத்திய எல்விஎம்3 எம்4 ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது என தகவல் வெளியாகி இருக்கிறது.
வெளியான தகவல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி எல்விஎம்3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்து வெற்றிகரமாக தன்னுடைய வேலையை முடித்துள்ளது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்திய எல்விஎம்3 எம்4 ராக்கெட் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
அரசின் திட்டத்தில் ‘இந்த’ பெண்கள் பயன் பெற முடியாது? காரணம் இது தான்!
இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்திய எல்விஎம்3 எம்4 ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜின் மேல்பகுதி பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்விஎம்3 என்பது 4,000 கிலோ எடையுள்ள விண்கலத்தை ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டிற்கு அனுப்பும் திறனை அடைவதற்காக இஸ்ரோவின் ஹெவி லிப்ட் ஏவுகணை வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.