உணவகங்கள் இரவு 10.30 மணி வரை செயல்பட அனுமதி – ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!
சண்டிகரில் கொரோனா தொற்று நிலைமையை மறுஆய்வு செய்த பின்னர் நேற்று சண்டிகர் அரசு பல ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
சண்டிகரில் சுகாதாரத்துறையின் அதிரகாரபூர்வ அறிவிப்பின் படி, நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 61,728 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு புதிதாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதுவரை அங்கி 808 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தற்போது சண்டிகரில் 143 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – முதன்மை கல்வி அலுவலர்!
சண்டிகர் அரசு நேற்று கொரோனா தொற்று நிலைமையை மறுஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, உணவகங்கள், பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு நிகழ்ச்சிகளில் அதிகபட்சகம் 100 நபர்கள் அல்லது 50% நபர்களுடன் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஜூலை 7ம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஞாயிற்றுக்கிழமை சந்தைகள் திறந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நகரில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10:30 மணி முதல் காலை 5 மணி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுக்னா ஏரியை ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.