வார இறுதி சனி, ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!!

0
வார இறுதி சனி, ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு - மாநில அரசு அறிவிப்பு!!!
வார இறுதி சனி, ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு - மாநில அரசு அறிவிப்பு!!!
வார இறுதி சனி, ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!!

சண்டிகர் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று:

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவி வந்தது. இதனால் மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. முழு ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை செயல்படாத நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்? அரசு வட்டாரங்கள் தகவல்!!

இரண்டாம் அலை:

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் அரசுகள் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவுறுத்தியிருந்தது. மக்கள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் மீண்டும் மார்ச் மாதம் முதல் நாட்டில் கொரோனா நோய் பரவத் தொடங்கியது. சண்டிகர் மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தினால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

வார இறுதி ஊரடங்கு:

சண்டிகர் மாநில உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாள் ஊரடங்கு உத்தரவை சண்டிகர் அரசு அறிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனோஜ் பரிடா அவர்கள், NDA தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே சண்டிகரில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here