தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

இன்று(ஜூன் 8) மற்றும் நாளை (ஜூன் 9) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 10.06.2021 முதல் 12.06.2021 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக பேக்கரி, உணவகங்களில் எச்சிலை தொடாமல் பார்சல் – நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகப்பட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் YMC நந்தனம் பகுதியில் 7 செமீ, அண்ணா பல்கலை, பூந்தமல்லி, சென்னை விமான நிலையம், கலவை, சாய் ராம் கல்லூரி மேற்கு தாம்பரம் தலா 5 செமீ, ஸ்ரீபெரும்புதூர், அம்முந்தி தலா 4 செமீ, திருவாலங்காடு, சோளிங்கர், வேலூர் தலா 3 செமீ, கோத்தகிரி, கொரட்டூர் தலா 2 செமீ, சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர், சதியார் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று(ஜூன் 8) முதல் 12.06.2021 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஜூன் 8) முதல் 10.06.2021 வரை தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஜூன் 8)மற்றும் நாளை(ஜூன் 9) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

10.06.2021 அன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 11.06.2021 மற்றும் 12.06.2021 தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 10.06.2021 முதல் 12.06.2021 வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஜூன் 8) முதல் 12.062021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!