தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

வானிலை தகவல்‌:

24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.06.2022 முதல்‌ 28.06.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தமிழக பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியீடு – 148 விடுமுறை நாட்கள்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

24.06.2022 முதல்‌ 28.06.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

24.06.2022, 25.06.2022: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!