தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் அந்த பகுதி மக்கள் கவனமாக இருக்கும் படியும் தெரிவித்து உள்ளனர்.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வெப்ப சலனம்‌ காரணமாக, இன்று தென்தமிழகம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களான , கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதன் பின்னர் நாளை (ஏப்ரல் 25) மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான, கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதன் பின்னர் ஏப்ரல் 26 ஆம் தேதி மேற்கு தொடர்ச்‌சி மலை பகுதி மாவட்டங்களான, தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தனது இரண்டாவது மகன் அர்ஷ் தூங்குவதை ரசிக்கும் ஆலியா – வைரலாகும் வீடியோ!

அதனை தொடர்ந்து ஏப்ரல் 27 ஆம் தேதி மேற்கு தொடர்ச்‌சி மலை பகுதி மாவட்டங்களான, கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடைசியாக ஏப்ரல் 28 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான, கன்னியாகுமரி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்றும் தெரிவித்து உள்ளனர்.

அடுத்தாக சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிஒிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள பாதி மாவட்டங்களில் மழை செல்‌சியஸ் அளவில் பதிவாகி உள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!