தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு (19.06.2021 முதல் 23.06.2021வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
21.06.2021 மற்றும் 20.06.2021:
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, சென்னை, புதுவை, பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
21.03.2021 முதல் 23.06.2021 வரை:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அரசு ஊழியர்களின் பயணப்படி (TA) உரிமைகோரல் – காலஅவகாசம் நீட்டிப்பு!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு நீலகிரி மாவட்டத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
19.06.2021, 20.06.2021:
கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
TN Job “FB Group” Join Now
19.06.2021 முதல் 23.06.2021 வரை:
தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.