தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்‌சி காரணமாக இன்று தஞ்சாவூர்‌, திருப்பத்தூர், இராணிப்பேட்டை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, அரியலூர்‌, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவாரூர்‌, பெரம்பலூர்‌, மாவட்டங்களில் இன்று (செப்.27) ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நாளை (28.09.2022) தமிழகத்தில் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, தஞ்சாவூர்‌, திருவள்ளூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம்‌, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 29.09.2022, 30.09.2022, 30.09.2022 ஆகிய 3 தினங்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நாளுக்கு நாள் தொடர்ந்து சரியும் ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் என்ன?

Exams Daily Mobile App Download

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அத்துடன் நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஒரு சில பகுதிகளில்‌ மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!