தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

27.05.2022: வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருச்சி, சேலம்‌, நாமக்கல்‌, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌, காரைக்கால்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

28.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

29.05.2022, 30.05.2022, 31.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

27.05.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

29.05.2022, 30.05.2022: தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, லட்சத்தீவு, தெற்கு கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ மற்றும்‌ தென்தமிழக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!