தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
கோடை வெயில்:
தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்போதே வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. வழக்கத்தை விடவும் கோடைகாலத்தில் ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை மக்களை அதிகம் வாட்டி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடத்த 10 நாட்களாக வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது. ஆரம்பத்திலேயே கோடை வெயில் அதிகமாக உள்ளதால் போக போக வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Central Bank of India வங்கியில் வேலை – ரூ.25,000/- வரை சம்பளம்
திடீர் மழை:
வெயில் அதிகமாக இருந்த போதிலும் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திடீரென்று மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
கனமழை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்